சுடச்சுட

    

    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீரமைப்புப் பணி

    By விழுப்புரம்,  |   Published on : 30th September 2016 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தல் பயன்பாட்டுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
     மாவட்டத்தில் 47 மாவட்ட ஊராட்சிகள், 22 ஒன்றியக் குழுக்கள், 15 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளில் உள்ள 10,025 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக். 17 மற்றும் 19-ஆம் தேதி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
     விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகள் மற்றும் 15 பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்தலுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயார்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
     இதற்காக ஒடிசா மாநிலத்திலிருந்து 1,000-க்கும் அதிகமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அண்மையில் வந்துள்ளது. அவை, விழுப்புரம் நகராட்சி சமுதாயக் கூடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதில், 650 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதனையடுத்து, அந்த மின்னணு இயந்திரங்களைச் சீர்படுத்தி தயார்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
     மத்திய அரசின் பெல் நிறுவனத்திலிருந்து வந்திருந்த பொறியாளர்கள் தலைமையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு, அதிலிருந்த பதிவுகள் அழிக்கப்பட்டன.
     புதிதாக பேட்டரிகள் உள்ளிட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டு, முதல்நிலை கன்ட்ரோல் யூனிட்கள் தயார்படுத்தும் பணிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்டத் தேர்தல் அதிகாரியான ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     உதவி ஆட்சியர் (பயிற்சி) சரயு, தேர்தல் அலுவலர்கள் மணி, சேகர், துரை, நகராட்சி ஆணையர் சையதுமுஸ்தபா கமால் உள்ளிட்ட அதிகாரிகள்
     உடனிருந்தனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai