சுடச்சுட

    

    மின்னல் தாக்கி வீடுகள் சேதம்: எம்.எல்.ஏ. நிவாரணம்

    By செஞ்சி,  |   Published on : 30th September 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்பாப்பாம்பாடி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 கூரை வீடுகள் புதன்கிழமை தீயில் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செஞ்சிமஸ்தான் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
     மேல்பாப்பாம்பாடி கிராமத்தில் வசித்து வரும் நீலமேகம் மனைவி மீனா மற்றும் அண்ணாமலை மனைவி வள்ளிகண்ணு ஆகியோரது கூரை வீடுகள் மின்னல் தாக்கியதில் தீயில் எரிந்து சேதமடைந்தன.
     இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செஞ்சிமஸ்தான் எம்.எல்.ஏ. அந்த கிராமத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, ரூ. 2,500 நிதியுதவி மற்றும் காய்கறி, அரிசி, பருப்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.
     மேலும், மின்னல் பாய்ந்ததில் காயமடைந்த அம்மாயி (70) திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai