விழுப்புரம் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கு ஜூன் 9-ஆம் தேதி அனைத்து கிராம நிர்வாக அலவலகங்களில் மனுக்கள் பெறப்படுகின்றன.
இதுகுறித்து, விழுப்புரம் கோட்டாட்சியர் அ.ஜீனத்பானு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் தமிழக அரசின் திட்டப்படி, விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்குவதற்கான மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாம் ஜூன் 9-ஆம் தேதி விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி வட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் விவசாயிகள் மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.