விக்கிரவாண்டி அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடுர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அங்காளன் (40). இவர், செவ்வாய்க்கிழமை மாலை மது அருந்திவிட்டு வந்து தனது மனைவி அஞ்சலட்சுமியிடம் (32) தகராறு செய்தாராம். அப்போது, ஆத்திரமடைந்த அஞ்சலட்சுமி தாக்கியதில் அங்காளன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அஞ்சலட்சுமி தாக்கியதால் அங்காளன் உயிரிழந்தது தெரிய வந்ததாம். இதைத் தொடர்ந்து, வழக்கை கொலை வழக்காக
மாற்றி அஞ்சலட்சுமியை போலீஸார்
புதன்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.