கண்டமங்கலம் அருகே தகராறில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், மேல் ஆச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரகுநாதன் (32). கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராதா (27). இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து ரகுநாதன் தனது மாமியார் ஊரான விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள எஸ்.ஆண்டிப்பாளையம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், ரகுநாதன் புதன்கிழமை மாலை மது
அருந்திவிட்டு வந்து தனது மனைவி ராதாவிடம் தகராறு செய்தாராம். அப்போது, ராதா எதிர்த்து பேசினாராம். அதனால்,
ஆத்திரமடைந்த ரகுநாதன் ராதாவின் கழுத்தை நெரித்துக் கொலை
செய்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ரகுநாதனை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.