விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், மாட்டிறைச்சிக்குத் தடை சட்டம் கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்து திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) நடைபெற உள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் செஞ்சி மஸ்தான் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் மாட்டிறைச்சி தடையை எதிர்த்தும், தமிழக அரசின் பாராமுகத்தைக் கண்டித்தும், அனைத்துக் கட்சிகள், மதசார்பற்ற அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) திண்டிவனம் காந்தியார் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு மதசார்பற்ற அமைப்புகள் கலந்துகொள்கின்றன.
எனவே, மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.