கள்ளக்குறிச்சி, துருகம் சாலையில் உள்ள பழைய மாரியம்மன் கோயிலில் உள்ள விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், பரசுராமர், சின்னா, மோடி மற்றும் நவக்கிரஹம் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு நூதன ஆலய பிம்பஸ்தாபன அஷ்டபந்தன சமர்ப்பன மஹா கும்பாபிஷேகம் பெருஞ்சாந்தி பெருவிழா வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, முதல் கால யாக பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) மாலை 5 மணியளவில் தொடங்கியது.
புதன்கிழமை காலை 4 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்பிகை சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.