பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பினர் விழுப்புரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்திட்ட வளாக நுழைவாயில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாவட்டத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டச் செயலாளர் முகமது காஜா வரவேற்றார்.
தமிழ்நாடு பொதுப்பணித் துறை அலுவலக ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் மேகநாதன், தமிழ்நாடு ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கடந்த 2003-க்கு முன்பிருந்த ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழுவை அமல்படுத்துவதற்கு முன்பு 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும், அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தமிழக அரசு அலுவலர்களுக்கு தொழில் வரி ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தின் உள்ள பல்வேறு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுகுந்தகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.