காவலர் தேர்வு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில், சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவலர் தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்களுக்கு எஸ்.பி. ஜெயக்குமார் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில், சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவலர் தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்களுக்கு எஸ்.பி. ஜெயக்குமார் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
 தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்போர் ஆகிய பதவிகளில் உள்ள 15,664 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் மூலம் நடைபெறும் இத்தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில், மொத்தம் 31,926 பேர் எழுத உள்ளனர்.
 இதற்காக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய ஊர்களில் 11 கல்வி நிலையங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு மையங்களில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என மாவட்ட தேர்வுக் குழுத் தலைவரும் மாவட்ட எஸ்.பி.யுமான ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி, விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப் பள்ளி, இந்திலி ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரி, சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதத் தேவையான வசதிகள் போதுமான அளவில் உள்ளனவா, குடிநீர், கழிவறை போன்ற வசதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
 தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 கள்ளக்குறிச்சி: காவலர் தேர்வை கள்ளக்குறிச்சி கோட்டப் பகுதியில் 15,100 பேர் எழுதுகின்றனர். கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.
 துணைக் காவல் கண்காணிப்பாளர் த.இராஜராஜன், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் மு.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com