உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில் கிணற்றில் தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை வட்டம், எறையூரைச் சேர்ந்தவர் சாமுவேல் (60). இவர் கடந்த 15-ம் தேதி வயலுக்கு சென்றுள்ளார். அப்போது வயலில் உள்ள மோட்டாரை இயக்கியபோது மோட்டாரிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததால், அதில் நிலைதடுமாறி சாமுவேல் கிணற்றில் விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.