வல்லம் ஒன்றியம், மேல்சேவூர் மதுரா செங்காமேடு கிராமத்தில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 1.20. லட்சம் மதிப்பில் செங்கமேடு கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை மாசிலாமணி எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.
வல்லம் தெற்கு ஒன்றியச் செயலர் மொடையூர் துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபா, விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், மகளிரணித் துணை அமைப்பாளர் பரிதா, மாவட்ட பிரதிநிதி ராஜகோபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.