விழுப்புரத்தில் மின் பொறியாளர்கள், மின் ஊழியர்களுக்கு தீயணைப்பு பாதுகாப்புப் பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகர துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெற்ற தீயணைப்பு பாதுகாப்புப் பயிற்சி முகாமுக்கு விழுப்புரம் மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் கே.தங்கவேல் தலைமை வகித்தார்.
செயற்பொறியாளர்கள் சைமன்சார்லஸ், பாரதி, உதவி செயற்பொறியாளர்கள் என்.வெங்கடேஷ்மணி, சிவசங்கரன், சந்திரன், ரவிச்சந்திரன், அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
உதவிப் பொறியாளர்கள் பாஸ்கர், ரவீந்திரன், குமாரவேல் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அமானுல்லா தலைமையில், வேல்முருகன், சிவஞானம், வெங்கடேசன், மகேஷ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள், தீத் தடுப்பு முறைகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினர்.
இதனையடுத்து, மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டால், அங்குள்ள தீத் தடுப்பு உபகணங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறைகள், தீத் தடுப்பின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, தீத் தடுப்பு குறித்து மின் ஊழியர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.