ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலூர் பேருந்து நிலைய வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலூர் பேருந்து நிலைய வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் ஜீவா.ராஜா தலைமை வகித்தார். கண்டாச்சிபுரம் வட்டத் தலைவர் கே.எஸ்.ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் வி.ஏழுமலை, மாவட்டச் செயலர் ஜெ.ஜெயக்குமார், மாவட்டப் பொருளாளர் எஸ்.கணபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் போதிய மருந்து, மாத்திரைகள் கிடைக்கவும், போதிய மருத்துவர்களை நியமிக்கவும், நோயாளிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், அரகண்டநல்லூரை மையமாகக் கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஏற்படுத்தவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலர் எம்.கே.பழனி, மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.பூமாலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். வட்டச் செயலர் எஸ்.கண்ணன் நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com