விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலர் பதவியில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தை நீக்கியதாக அறிவித்த அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரனைக் கண்டித்து செஞ்சியில் செவ்வாய்க்கிழமை அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி ஒன்றியச் செயலர் அ.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் கு.கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட மருத்துவ அணிச் செயலர் ராமச்சந்திரன், ஒன்றிய பாசறை அணி க.சோழன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், நகர எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலர் ஆர்.சரவணன், துணைச் செயலர் அஜிஸ், பத்மநாபன்,பொன்னுரங்கன், ஒன்றிய இளைஞர் அணிச் செயலர் திருமலை, மாவட்ட மாணவரணி துணைச் செயலர் கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தினகரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
வல்லம் ஒன்றிய அதிமுக சார்பில், நாட்டார்மங்கலம் கூட்டுச்சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் கு.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளர் மனோகரன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் பரிமளா பன்னீர்செல்வம், பாசறை பாலமுருகன், சித்தாமூர் பூபதி, கம்மந்தூர் ஆறுமுகம், விவசாய அணி இரும்புலி கிருஷ்ணன், தென்புத்தூர் செந்தில், தையூர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.