நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மண்டல அமைப்பாளர் ஆர்.வேலு தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் எஸ்.செல்வராஜ், துணைச் செயலர் வ.சதீஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூவைஆறு, பொருளாளர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாணவி அனிதா தற்கொலைக்குக் காரணமாக அமைந்த நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.