தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நல்லாசிரியர் விருது பெற்ற விழுப்புரம் மாவட்ட பள்ளி ஆசிரியர்கள் 17 பேர், மாவட்ட ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் நிகழ் ஆண்டுக்கான (2016-17) நல்லாசிரியர் விருது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஆர்.விஜயா, அரசு நடுநிலைப் பள்ளி வளவனூர், ஆசிரியர்
கோ.ஜெயந்தி அரசுப் பள்ளி கண்டமங்கலம், ஆசிரியர் சே.சசிகலா அரசுப் பள்ளி ஆனாங்கூர், ஆசிரியர் சாந்தி அரசுப் பள்ளி வெள்ளிமேடுப்பேட்டை, ஆசிரியர் குமதவள்ளி அரசுப் பள்ளி வடமருதூர், ஆசிரியர் தரணி அரசு பள்ளி வீரபாண்டி, ஆசிரியர் கீதா அரசுப் பள்ளி தொட்டியம், ஆசிரியர் சாமிதுரை அரசுப் பள்ளி அசகளத்தூர், ஆசிரியர் நாகராஜன் அரசுப் பள்ளி புக்குலம்.
மேல்நிலைப் பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் துரைசாமி, அரசுப் பள்ளி களமருதூர், உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் பள்ளி இசை ஆசிரியர் கலையணங்கு, மரக்காணம் மகளிர் பள்ளி ஆசிரியர் சிவக்குமார், எண்டியூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன், நயினார்பாளையம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், பள்ளக்கச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர் வெங்கடேசன், விழுப்புரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயஸ்ரீ, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் பள்ளி ஆசிரியர் ஆலிமா லூக்கோஸ் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றனர்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், முதல்வர் கே.பழனிசாமி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். விருது பெற்ற விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அப்போது, தன்னலமில்லாத சேவை, அர்ப்பணிப்புப் பண்பு, காலந்தவறாமை, பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களை நல்வழிப்படுத்தி ஒழுக்க நெறிமுறைகளை கற்பிக்கும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் நல்ல மாணவர்களை உருவாக்கி, அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த பண்புடன் பணியாற்றும் ஆசிரியர்களின் சேவைகளை பாராட்டுகள்.
விருதுபெற்ற ஆசிரியர்கள் இதனை ஊக்கமாக எடுத்துக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்று ஆட்சியர் வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ராஜேந்திரன், காளிதாஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.