விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறிய ரக சரக்கு வாகனத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மரக்காணம் அருகே அனிச்சங்குப்பம் பகுதியில் உள்ள மதுவிலக்கு சோதனைச்சாவடியில், செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்துமாறு போலீஸார் சமிக்ஞை செய்தனர். இதனைக் கண்ட ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடினார்.
போலீஸார், சோதனையிட்டபோது, அந்த வாகனத்தில் 2,420 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம். புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு இந்த மதுப்புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றிருக்கலாம் என்ற போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, மதுப்புட்டிகளுடன் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.