Enable Javscript for better performance
வாக்காளர் பெயர் சேர்க்கை குறித்து வாகன பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம் குறித்து, கள்ளக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு வாகன பிரசாரம் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
    1.1.2018-இல் 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது மற்றும் திருத்தம் செய்வது குறித்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.22) அந்த அந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகின்றன,.
    இதுதொடர்பாக வாக்காளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் கள்ளக்குறிச்சியில் ஆட்டோ வாகன பிரசாரம் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
    இந்த  வாகன பிரசாரத்தை கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் இரா.சுப்புராயன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் இரா.ராஜலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அக்பர் பாஷா, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai