மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 6-ஆவது தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
மின்னியல், மின்னணுவியலில் அறிவார்ந்த கணினி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு கல்லூரித் தலைவர் ம.தனசேகரன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் சுகுமாறன், செயலர் நாராயணசாமிகேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். டீன் ராஜப்பன் வாழ்த்துரை வழங்கினார்.துறைத் தலைவர் முரளிகிருஷ்ணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அருணை பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் சரவணன் கலந்து கொண்டு நவீன கால தொழில்நுட்பங்களின் பங்களிப்பு பற்றியும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறையில் ஏற்படக்கூடிய ஆராய்ச்சி மாற்றங்கள் குறித்தும் விளக்கினார். முதுநிலை, இளநிலை மாணவ, மாணவிகள் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர்கள் முத்துக்குமார் மற்றும் ரேகா செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


