திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை கிளை நூலகத்தில் இ-பயிர் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில் இந்திய பொது நூலகங்களின் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் தே.ச.கிரிஜா தலைமையில், பயிர் மருத்துவ விஞ்ஞானி சுதாகர், மருத்துவர் ஷோபனா ஆகியோர் விவசாயிகளுக்கு இ-பயிர் குறித்து விளக்கமளித்தனர்.
அப்போது, விவசாயிகள் தங்களது நிலங்களில் சாகுபடி செய்து பாதிப்படைந்த பயிர்கள், மண் மாதிரிகளை மருத்துவர்களிடம் காண்பித்து தீர்வுகளைக் கேட்டறிந்தனர். மேலாண்மை பரிந்துரைகளை விவசாயிகள் செல்லிடப்பேசிக்கு தமிழில் குறுஞ்செய்தியாகவும் பயிர் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
முகாமில் விவசாயிகள், வாசகர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை நூலகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.