விழுப்புரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த மன்றத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலராக இருந்த ரஜினி இப்ராகிம் பல்வேறு புகார்களின் காரணமாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய மாவட்டச் செயலராக எத்திராஜ் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் மன்ற நிர்வாகிகளுடன் இரு சக்கர வாகனம், கார்களில் பேரணியாகச் சென்று அம்பேத்கர், காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, சென்னை புறவழிச்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் உள்ள அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மன்றத்தின் மாவட்டத் துணைச் செயலர் வாஞ்சிநாதன், இணைச் செயலர்கள் ஜவகர், குமார், மாவட்ட துணைச் செயலர்கள் ரவி, முருகன், நகர நிர்வாகிகள் கலியன், சுதாகர், ரமேஷ், ஜெயராமன், வெங்கட்ராமன், ராஜ்குமார், ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.