விழுப்புரம் கே.கே. சாலை, அண்ணாநகர் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர்(39) என்பவர், கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக விழுப்புரம் மேற்கு போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சங்கரின் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.