சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் கைலாச நாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பிரியா, கோட்டாட்சியர் சரஸ்வதி உள்ளிட்ட அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
வீரட்டானேஸ்வரர் கோயிலில்... நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் சமபந்தி போஜனம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை சார்-ஆட்சியர் சாருஸ்ரீ தொடக்கி வைத்தார்.
முன்னதாக, காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையுடன், சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சமபந்தி போஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வட்டாட்சியர் ப.செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.