மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது
கண்மங்கலம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கண்டமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனர். பக்கிரிப்பாளையம் கிராமத்தில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, பக்கிரிப்பாளையம், சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் திருடி கடத்த முயன்ற லாரியை மடக்கிப் பிடித்து, ஓட்டுநரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் வழுதாவூரைச் சேர்ந்த தனபால் மகன் ராஜீ (32) என்பதும், உரிய அனுமதியின்றி ஆற்று மணலைத் திருடி கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
