விடைத்தாள் திருத்தும் மையங்கள் முன் போராட்டம் நடத்த ஜாக்டோ ஆலோசனை 

கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையங்களில் போராட்டம் நடத்துவது தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின்

கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையங்களில் போராட்டம் நடத்துவது தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்கம், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர் இயக்குநர் சங்கம் உள்பட 19 சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் லூர்து சேவியர், மாவட்டச் செயலாளர் முத்தையன் ஆகியோர் தலைமை வகித்தனர். பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் அருணகிரி, மாவட்டத் தலைவர் விஸ்வலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, தமிழக தமிழாசிரியர் கழக மாநிலப் பொருளாளர் கோவிந்தன்ஆகியோர் சிறப்புரையாற்றினர். மரியராஜ் நன்றி கூறினார்.
 பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பணிக்காலம் வரன்முறை செய்ய வேண்டும், நிர்வாக சீர்த்திருத்தம் என்ற பெயரில் ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை குறைக்க அமைக்கப்பட்ட குழுவை உடனே கலைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் முன் ஒரு மணி நேரம் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்துதல், வரும் 24-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடும் பணிகளை புறக்கணித்து, தொடர் மறியல் போராட்டத்தை நடத்துதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com