கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி

அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கோரிக்கைப் பேரணி மேற்கொண்டனர்.

அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கோரிக்கைப் பேரணி மேற்கொண்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய  இணைய தள வசதி, மாவட்ட பணி மாறுதல்,  கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு பொறுப்பூதியம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நிருவாக அலுவலர் சங்கத்தினர் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் வேலைநிறுத்தம் செய்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மேற்கொண்டனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, மாவட்டச் செயலாளர் எஸ்.புஷ்பகாந்தன் தலைமையில் மாவட்டத்தில் 13 வட்டங்களில் பணியாற்றி வரும் கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர்,  விழுப்புரம்  சுதாகர் நகர்,  திருச்சி சாலை வழியாக பேரணியாக வந்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதையடுத்து,  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பதாகைகளுடன் கோஷங்களிட்ட அவர்கள்,  நிறைவாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.   300-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தால்,  வருவாய்த் துறையில் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com