செஞ்சி வந்தடைந்தது பிரம்மாண்ட பெருமாள் சிலை

வந்தவாசி வட்டம், கொரக்கோட்டையிலிருந்து லாரி மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்டமான பெருமாள் சிலை இரவு செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை அருகே வந்தடைந்தது. 

வந்தவாசி வட்டம், கொரக்கோட்டையிலிருந்து லாரி மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்டமான பெருமாள் சிலை செவ்வாய்க்கிழமை இரவு செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை அருகே வந்தடைந்தது. 
 கொரக்கோட்டையில் இருந்து புறப்பட்ட சிலை கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு தீவனூரை வந்தடைந்தது. 4 நாள்கள் சிலை அங்கிருந்த நிலையில், தடையின்றி சிலையை கொண்டுசெல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், செஞ்சி வழியாக சிலையை கொண்டு செல்ல தீர்மானித்தனர். 
தொடர்ந்து, தீவனூரில் இருந்து செஞ்சி, திருவண்ணாலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்வது என முடிவு செய்து, தீவனூரில் இருந்து சிலை புறப்பட்டு செஞ்சி எல்லையை வந்தடைந்தது.  சங்கராபரணி ஆற்றுப் பாலம் சிலையின் பாரத்தை தாங்காது என்பதால், கலவாய் கூட்டுச் சாலையில் இருந்து செஞ்சி தேசூர்பாட்டை வழியாக செல்வது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com