விழுப்புரம் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.  

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.  
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி மாணவியர் புல முதன்மையர் 
ஆர்.ராஜேஸ்வரி வரவேற்றார்.   சர்வதேச கால்பந்து சம்மேளன நடுவர் ரூபாதேவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளைத்  தொடக்கி வைத்தார்.   ஒலிம்பிக் கொடியை இ.எஸ்.கல்விக் குழும துணைப் பதிவாளர் சௌந்திரராசன் ஏற்றி வைத்தார்.  கல்லூரி முதல்வர் ஏ.வி.அருணாகுமாரி தொடக்க உரையாற்றினார். 
விளையாட்டுத் துறைச் செயலர் என்.ஜனனி தலைமையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். வீராங்கனைகள்,  விளையாட்டுக்கான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினர். தொடர்ந்து,  பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.  கலை நிகழ்ச்சிகள்,  யோகா மற்றும் தற்காப்புக் கலைகளை செய்து காண்பித்தனர்.   நிறைவில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழுவினருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன நடுவர் ரூபாதேவி பரிசுக் கோப்பைகள் வழங்கிப் பேசினார்.  பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.  கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மனோகரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com