Enable Javscript for better performance
அதிமுக ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற இந்தக்  கூட்டத்துக்கு, ஒன்றியத் செயலர் ஜி.மணிராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலர் எஸ்.துரை வரவேற்றார். எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலர் எம்.கிருஷ்ணன், பேரூராட்சி வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் சௌ.ராமலிங்கம், ஜெயபால், இளைஞரணி எஸ்.எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான இரா.குமரகுரு பங்கேற்று, கட்சி நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் படிவத்தை வழங்கிப் பேசினார்.  
    முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரா.சாய்ராம், நகர துணைச் செயலர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai