Enable Javscript for better performance
அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் நாளை உறுப்பினர் சேர்க்கை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் நாளை உறுப்பினர் சேர்க்கை முகாம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் சனிக்கிழமை (பிப்.10) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
    இது குறித்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (பொ) ராமு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு அமைப்புசார ஓட்டுநர் நல வாரிய தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் கல்வி, திருமணம், கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் ஆகியவற்றுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    எனவே, நல வாரியத்தில் வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை ஊர்த்தி தொழிலாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கவும் விழுப்புரம், ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    எனவே, இந்த முகாமில் ஓட்டுநர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களாக சேர்ந்து பயனடைய வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் ராமு தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai