Enable Javscript for better performance
இயற்கை வேளாண் விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் இயற்கை வேளாண் விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
    கூட்டத்துக்கு, வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார். விளந்தை வாசகர் வட்டத் தலைவர் அ.சண்முகம், ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அ.சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல் நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
    கூட்டத்தில், விவசாயத்தில் நூலகத்தின் பங்கு என்ற தலைப்பில் மாவட்ட நூலக அலுவலர் ரா.சுப்பிரமணியன், உணவே மருந்து-மருந்தே உணவு என்ற தலைப்பில் இயற்கை வேளாண் ஆய்வாளர் மைசூர் கு.புகழேந்தி ஆகியோர் பேசினர்.  அருள் கவிஞர் அருள்நாதன் தங்கராசு, வானவில் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வே.ஜெயக்குமார், இயற்கை வேளாண் விவசாயிகள் பள்ளிச்சந்தல் அய்யப்பன், தேவரடியார்குப்பம் கோபிநாத், குலதீபமங்கலம் மணிகண்டன் ஆகியோர் சந்தேகங்களை கேட்டறிந்தனர். ஏற்பாடுகளை நூலகப் பணியாளர்கள் சு.சம்பத், ரா.கோகிலா, ச.தேவி, செ.சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai