Enable Javscript for better performance
கரும்பு ஏற்றவும், தொகுப்பு வீடுகளுக்கு மணல் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும்: மாட்டு வண்டித் தொழிலாளர்க- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு ஏற்றவும், தொகுப்பு வீடுகளுக்கு மணல் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும்: மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி,  சின்னசேலம் பகுதிகளில் மாட்டு வண்டிகளில் அரசு தொகுப்பு வீடு கட்டும் பணிக்கு மணல் எடுக்கவும்,  சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிச் செல்லவும் அனுமதியளிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இது குறித்து,  தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில்,  கள்ளக்குறிச்சி,  கச்சிராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர்,  வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    அப்போது அவர்கள் கூறியதாவது:  கள்ளக்குறிச்சி,  சின்னசேலம் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் உள்ளனர்.  இவர்களுக்கு விவசாயப் பொருள் ஏற்றிச் செல்லும் பணிகள் குறைந்துவிட்டதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 
    ஏற்கெனவே, கோமுகி சர்க்கரை ஆலைப் பகுதியி 5 கி.மீ தொலைவுக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து கரும்பு வெட்டி எடுத்து வர மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்தனர்.  தற்போது அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மீண்டும் மாட்டு வண்டிகள் மூலம் கரும்பு எடுத்து வர சர்க்கரை ஆலை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.
    கள்ளக்குறிச்சி,  சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் தொகுப்பு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
     இதற்கு போதிய மணல் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதற்காக,  கோமுகி ஆற்றின் மட்டப்பாளை,  பொட்டியம், மாயம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க, சிறப்பு மணல் குவாரி அமைத்துத் தர வேண்டும் என்றனர்.
    இவர்களிடம் கோரிக்கை மனுவைப் பெற்ற ஆட்சியர், இல.சுப்பிரமணியன், மாட்டு வண்டிகளில் கரும்பு ஏற்றிச் செல்ல ஆலை நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்படும்.அரசு தொகுப்பு வீட்டுப் பணிகளுக்கு மட்டும் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து வருவது தொடர்பாக வருவாய்த் துறை மூலம் ஆய்வு செய்து,  அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai