Enable Javscript for better performance
சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாலையை சீரமைக்கக் கோரி வடவெட்டி கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     மேல்மலையனூர் தாலுகா, வளத்தி அருகே உள்ளது வடவெட்டி கிராமம். இந்தக் கிராமத்துக்குச் செல்ல செஞ்சி - சேத்பட் பிரதான சாலையில் சுமார் 3 கிமீ தொலைவுக்குச் செல்லவேண்டும். ஆனால் இந்த 3 கிமீ தொலைவு சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி வியாழக்கிழமை கிராம மக்கள் திரண்டு செஞ்சி  - சேத்பட் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     தகவல் அறிந்து வந்த வளத்தி போலீஸார் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த செஞ்சி எம்எல்ஏ செஞ்சி மஸ்தான், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது சட்டப்பேரவை தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சாலை அமைத்துத் தருவதாக உறுதி அளித்தார். 
    இதையடுத்து கிராம மக்கள் கலைந்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai