Enable Javscript for better performance
சிறுபான்மையினர் முன்னேற்றப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நல முன்னேற்றத் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. 
    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்,  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  
    கூட்டத்தில்,  சிறுபான்மை மக்களின் கல்வி வாய்ப்பை அதிகரிக்கவும்,   பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பை  உறுதி செய்யவும்,  வாழ்வாதரத்தை மேம்படுத்துதல் போன்ற குறிக்கோள்களுக்காக பிரதமரால் புதிய 15 அம்சத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சேவைகள் சீராக கிடைக்கச் செய்தல்,  பள்ளிக் கல்வியை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்தல்,  உருது மொழியை பயிற்றுவிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்,  மதரஸா கல்வி முறையை நவீனப்படுத்துதல்,  கல்வியில் சிறந்து விளங்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்,  மெளலானா ஆசாத் கல்வி அமைப்பின் மூலம் கல்விக்கூடங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள்.
    மேலும்,  சுயவேலைவாய்ப்பு மற்றும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், ஊதியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சென்று சேருவதை உறுதிசெய்தல்,  தொழில்நுட்ப பயிற்சி மூலம் திறனை மேம்படுத்துதல்,  பொருளாதார நடவடிக்கைகளுக்கான கடன் உதவியை அதிகரித்தல்,  அரசுப் பணி வாய்ப்பு,  வீட்டு வசதி திட்டத்தில் சம அளவு பங்கு,  சிறுபான்மையினர் வாழும் குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.  
    கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கோ.ராம்சந்தர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai