Enable Javscript for better performance
பள்ளிக்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    திருக்கோவிலூரை அடுத்த வடகரைத்தாழனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் க.சந்தோஷ்குமார், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் அ.ஜான்சன்.  இவர்கள் இருவரும் பணிக்கு சரிவர வருவதில்லையாம்.
    இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.சிவமதிவாணன், இந்தப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர்கள் இருவரும் பள்ளியில் பணியில் இல்லையாம்.
    இதையடுத்து, பள்ளிக்கு தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராத காரணத்துக்காக க.சந்தோஷ்குமார், அ.ஜான்சன் ஆகிய இருவரையும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
    வருகைப் பதிவேட்டில் அவர்கள் வராததது குறித்து எந்தத் தகவலும் பதிவு செய்யப்படாத காரணத்துக்காக, பள்ளித் தலைமை ஆசிரியர் ஜே.ஜெயபதிக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai