Enable Javscript for better performance
புதுச்சேரியிலிருந்து காரில் மதுப் புட்டிகளை கடத்தியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியிலிருந்து காரில் மதுப் புட்டிகளை கடத்தியவர் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வியாழக்கிழமை காரில் மதுப் புட்டிகளை கடத்திச் சென்றவரை போலீஸார் கைது செய்தனர்.
    புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் மதுப் புட்டிகள் கடத்திச் செல்லப்படுவதாக கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாருக்கு வியாழக்கிழமை பிற்பகல் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோட்டக்குப்பம் மது விலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் (பொ) 
    ராஜேஷ் தலைமையிலான போலீஸார், கீழ்புத்துப்பட்டு பகுதியில் உள்ள கடற்கரை சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    அப்போது, பிரபல உணவகம் அருகே நின்றிருந்த காரை சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டனர். அதில், விலை உயர்ந்த 348 புதுச்சேரி மாநில மதுப் புட்டிகள் இருந்ததைக் கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும்.
    உடனடியாக காரில் இருந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் மணிவண்ணன் (32) என்பதும், புதுச்சேரியிலிருந்து குறைந்த விலைக்கு மதுப் புட்டிகளை வாங்கி கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
    இதையடுத்து, மணிவண்ணனை போலீஸார் கைது செய்ததுடன், மதுப் புட்டிகள், காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நகர் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai