Enable Javscript for better performance
பைக் விபத்தில் இளம்பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரசூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில்  இளம்பெண் புதன்கிழமை மாலை உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். 
    சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் மகள் மேரிகுயின் (20). பட்டதாரியான இவர், கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிக்கும் உறவினர் ஜான்ராபர்ட் வீட்டில் தங்கியிருந்து  தனியார் கல்லூரியில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்  உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூரில் துக்க நிகழ்ச்சியில் ஜான்ராபர்ட் உள்ளிட்ட மூவரும் புதன்கிழமை பங்கேற்றனர்.  பின்பு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு சென்றுகொண்டிருந்தனர். 
    அரசூர் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஜான் ராபர்ட்,  அவரது மனைவி நிர்மலா (35), மேரிகுயின் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  ஆனால் வழியிலேயே மேரிகுயின் உயிரிழந்தார். ஜான்ராபர்ட், நிர்மலா இருவரும் முதலுதவிக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai