Enable Javscript for better performance
போதையிலிருந்த தீயணைப்பு வீரர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பணியின் போது மது போதையில் இருந்ததாக, தீயணைப்பு வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொ) ஜெகதீஷ் அண்மையில் ஆய்வு நடத்தினார். அப்போது, பணியில் இருந்த தீயணைப்பு வீரர் ஜெகதீசன் மது போதையில் இருந்ததைக் கண்டார்.
    உடனே, அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து, அறிக்கை அளிக்குமாறு நிலைய அலுவலருக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
    மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் பேரில், தீயணைப்பு வீரர் ஜெகதீசனை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai