Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை நகர மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் கே.தங்கராசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி.சேகர், ஏ.பி.ரமேஷ், 
    பி.ஸ்டாலின், எம்.சுப்பிரமணியன்,  பி.ஆர்.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    மாவட்ட செயற்குழு எஸ்.வேல்மாறன், வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலர் பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
    ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சியில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்துதல்,  புதை சாக்கடை திட்டத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், அனைத்து வார்டுகளிலும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குதல், அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமனம் செய்தல், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றுசெல்ல  நடிவடிக்கை எடுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
    திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டச் செயலர் ஏ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 
    ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். வசந்தகிருஷ்ணாபுரம்-கொடுக்கப்பட்டு இடையே, துரிஞ்சலாற்றில் பாலம் கட்ட வேண்டும். ஜி.அரியூர் பகுதியில் 100 கி.வா. துணை மின் நிலையப் பணிகளை, விரைவில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai