Enable Javscript for better performance
விழுப்புரம் நகராட்சி மைதான சீரமைப்புப் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் நகராட்சி மைதான சீரமைப்புப் பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி விடப்பட்ட நகராட்சி மைதானத்தை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
    விழுப்புரத்தில் பரந்து விரிந்து கிடக்கும் நகராட்சி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், அரசு விழாக்கள் போன்றவை நடத்தப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக மைதானத்தில் மழை நீர், கழிவு நீர் தேங்கியதால், பராமரிப்பின்றி புதர்கள் மண்டின. மேலும், மண் மேடுகள், ஆக்கிரமிப்புகளால், பொதுமக்கள் நடமாட வழியில்லாத நிலைக்கு இந்த மைதானம் சென்றது.
    இந்த நிலையில், இந்த மைதானத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக தினமணி நாளிதழிலும் வியாழக்கிழமை விரிவாக செய்தி வெளியானது.
    இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், நகராட்சி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, நகராட்சி மைதானத்தை சீர்படுத்தும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
    அதனடிப்படையில், விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நகராட்சி சார்பில், 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் புதர்கள், செடிகொடிகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. மேலும், அங்கு கொட்டப்பட்டிருந்த மண் மேடுகளையும் இயந்திரங்கள் மூலம் சமப்படுத்தி மைதானத்தை சீர்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
    இந்த மைதானம் சமன்படுத்தப்பட்டு, புதர்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, படிப்படியாக புதுப்பிக்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் செந்திவேல் தெரிவித்தார். இதற்கு, பொதுமக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai