மேலச்சேரி பச்சையம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி விழா

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, செஞ்சி மேலச்சேரி காட்டில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். 

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, செஞ்சி மேலச்சேரி காட்டில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். 
செஞ்சி அருகே உள்ள மேலச்சேரி காட்டில் பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை விழா பிரசித்தி பெற்றதாகும்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த பலருக்கு குலதெய்வமாக விளங்கும் பச்சையம்மன் கோயிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தங்களது குடும்பத்தினருடன் வந்து குழந்தைகளுக்கு முடி காணிக்கை அளித்து, காது குத்தி, பொங்கலிட்டு படையல் வைப்பது வழக்கம்.
அந்த வகையில் நிகழாண்டு முதல் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பச்சையம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ரவி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com