சிப்காட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. கோரிக்கை

மயிலம் தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு,

மயிலம் தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு, மத்திய அரசின் புதிய வழிகாட்டு மதிப்பீட்டின்படி உரிய தொகையை வழங்க வேண்டும் என்று மயிலம் எம்.எல்.ஏ. இரா.மாசிலாமணி சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
 இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அவர் பேசியதாவது:
 மயிலம் தொகுதிக்குள்பட்ட வெண்மணியாத்தூர், பெலாகுப்பம், கொள்ளாறு ஆகிய இடங்களில் சிப்காட் தொழிற்பேட்டை கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. 2014ஆம் ஆண்டு விவசாயிகளுடைய கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்டது.
 2015ஆம் ஆண்டு பெலாகுப்பம் பகுதியில் உள்ள நிலத்துக்கு ரூ.3 லட்சமும், வெண்மணியாத்தூர் பகுதியில் உள்ள நிலத்துக்கு ரூ. 58 ஆயிரமும், கொள்ளாறுக்கு ரூ. 80 ஆயிரமும் இடைக்கால நிவாரணம் அளித்து நிலங்களை கையகப்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்தப் பகுதி விவசாயிகளில் பலர், மத்திய அரசின் நில கையகப்படுத்தப்படும் சட்டத்தின்புதிய வழிகாட்டு மதிப்பீடு மூலமாக தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி, இதுவரை அந்த தொகையைப் பெறவில்லை.
 202 பேர் மட்டுமே அந்த இழப்பீட்டுத் தொகையை வாங்கியிருக்கிறார்கள். இன்னும் 1,200 பேர் வாங்கவில்லை. அதில் மனைப் பிரிவில் 200 பேர் வாங்கவில்லை.அந்த பணத்தை இன்றைக்கு தேசிய வங்கியில் நீங்கள் செலுத்தி உள்ளீர்கள். 8 ஆண்டுகளாக அந்த விவசாயிகளுக்கு அந்த நிலத்தை, பயன்படுத்த முடியவில்லை. அந்த நிலத்தை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்தப் பகுதி மக்களை,விவசாயிகளை அழைத்துப் பேசி புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் உரிய இழப்பீட்டை அவர்களை வழங்கி, நிலத்தை கையப்படுத்தி இந்த ஆண்டிலேயே அந்த தொழிற்சாலையை தொடங்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com