சுடச்சுட

  

  மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

  By  விழுப்புரம்,  |   Published on : 14th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய பாஜக அரசின் நான்கு ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
   விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஆதவன் தலைமை வகித்தார். கோட்ட இணைப் பொறுப்பாளர் அருள், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி அமைப்பாளர் ராஜரத்தினம், விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் விநாயகம், விழுப்புரம் மேற்கு மாவட்டத் தலைவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசியக் குழு உறுப்பினர் தியாகராஜன் வரவேற்றார்.
   கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா சிறப்புரையாற்றிப் பேசியதாவது: மத்திய பாஜக அரசின் சாதனைகள் 100 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. எளியவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கச் செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி. தூய்மையைப் பேணுதல் தொடங்கி அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்திக் காட்டியவர் அவர். இந்த ஆட்சியில்தான் மக்களுக்கான திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
   திருச்சி கோட்ட இணைப்பொறுப்பாளர் சிவசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஏ.டி. கலிவரதன், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் ராம.ஜெயக்குமார், விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் சுகுமார் உள்ளிட்டோர் சாதனைகளை விளக்குப் பேசினார்.
   தொகுதிப் பொருப்பாளர்கள் அன்பழகன், ராம்நாத், கண்ணன், மாவட்டப் பொருளாளர் வினோத்குமார், தொகுதி அமைப்பாளர்கள் திருசெல்வக்குமார், குணாளன், ஏழுமலை, தர்மலிங்கம், கோதண்டபாணி, கஜேந்திரன், காமராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, வானூர் ஒன்றியச் செயலாளர் தங்க.சிவக்குமார், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் பழனி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai