Enable Javscript for better performance
கிணற்றில் தள்ளி அண்ணன் கொலை: தம்பி கைது- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கிணற்றில் தள்ளி அண்ணனை கொலை செய்ததாக, தம்பி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    செஞ்சி வட்டம், ஈயகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன்கள் ராஜேந்திரன்(60), பச்சையப்பன்(50) விவசாயிகளான இவர்கள் இருவரும் தங்களுக்குப் பொதுவான கிணற்றில் இருந்து நீரை எடுத்து பாசனம் செய்து வருகின்றனர்.
    வியாழக்கிழமை மாலை, கிணற்றில் இருந்து ராஜேந்திரன் கூடுதலாக தனது வயலுக்கு நீரை இறைத்தாராம். இதை பச்சையப்பன் தட்டிக்கேட்ட போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பச்சையப்பன் ராஜேந்திரனை எட்டி உதைத்து கிணற்றில் தள்ளியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீஸார் வழக்குப் பதிந்து பச்சையப்பனை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai