Enable Javscript for better performance
ஏப்ரல் 1-இல் விஜயகாந்துக்குப் பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி மணலூர்பேட்டையில் நடைபெறும் விஜயகாந்துக்கான பாராட்டு விழா பொதுக்கூட்டத்தில் தொகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேமுதிக செயலர் எல்.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்தார்.
    இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ரிஷிவந்தியம் தொகுதிக்கு உள்பட்ட மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் புதிதாக மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், தமிழகத்தில் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களும், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களும் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், இதற்கான கோரிக்கையை தமிழக அரசிடம் முன் வைத்தார். கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
    இதனையடுத்து, அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் வலியுறுத்தி, ரூ. 21 கோடியே 89 லட்சம் சிறப்பு நிதியாக பெற்று வந்து, பாலத்தைக் கட்டி முடித்தார். இந்த நிலையில், சம்பந்தமில்லாதவர்கள் பாலத்தைத் திறந்து வைத்ததை தொகுதி மக்கள் ஏற்கவில்லை. எனவே, விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்த முடிவெடுத்தனர்.
    அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி மணலூர்பேட்டையில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உள்பட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai