Enable Javscript for better performance
கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா மகாவித்யாலயம் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல், வணிக மேலாண்மைத் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலர் ஆசிரம சகோதரி யதீஸ்வரி அனந்தப்ரேமப்ரியா அம்பா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.பழனியம்மாள் வரவேற்றார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.நடராஜன், வணிகவியல் துறைத் தலைவர் எஸ்.குருசாமி, சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியை ஜி.கற்பகவள்ளி, துணைப் பேராசிரியை இ.நிருபமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
    இதில், பல்வேறு கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியை வணிகவியல் துறைத் தலைவி எஸ்.லட்சுமிபிரியா, வணிக மேலாண்மை துறைத் தலைவி பி.கௌசல்யா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். வணிகவியல் உதவிப் பேராசிரியை ஆர்.விஜயலட்சுமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai