Enable Javscript for better performance
காவிரி: கோபுரத்தில் ஏறி தவாகவினர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக்  கட்சியினர் விழுப்புரத்தில் பொதிகை தொலைக்காட்சி நிலைய கோபுரத்தில் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்தது. அதன்படி, அந்தக் கட்சியினர் விழுப்புரத்தில் திருச்சி சாலையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி நிலைய கிளை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனர். அவர்கள் அங்கிருந்த உயர் கோபுரத்தில் கட்சிக் கொடிகளுடன் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் எம்.ஆர்.குமரன் தலைமை வகித்தார்.  மாநில துணைப் பொதுச் செயலர் ஆர்.ரவிஅலெக்ஸ்,  மாநில தொழிற்சங்கப் பொருளாளர் ஆர்.பன்னீர்செல்வம்,  மாவட்டத் தலைவர் 
    சி.ஆர்.பாலமுருகன்,  பொருளாளர் ஏ.சாய்கமல், மாணவரணிச் செயலர் அலெக்ஸ்தீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களிடம் விழுப்புரம் டிஎஸ்பி ஜெ.சங்கர்,  விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன்,  உதவி ஆய்வாளர் ஆனந்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கீழே இறங்கச் செய்தனர்.
    கடலூரில் 11 பேர் கைது: இதேபோல, கடலூரில் தவாக மாவட்டச் செயலர் த.ஆனந்த் தலைமையில் பலர் ஆல்பேட்டை பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கடலூர் கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் லாமேக் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அனைவரும் கீழே இறங்கினர். 
    போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில மாணவரணி நிர்வாகி அருள்பாபு, நகர துணைச் செயலர் சிலம்பு, தொழிற்சங்கப் பிரிவு சுரேஷ், கட்சி நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், ராஜேஷ் உள்ளிட்ட 11 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai