Enable Javscript for better performance
கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, கருப்புக் கண்ணாடி- Dinamani

சுடச்சுட

    

    கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு  தொப்பி, கருப்புக் கண்ணாடி

    By DIN  |   Published on : 31st March 2018 10:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை வெயிலை சமாளிக்க விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து போலீஸாருக்கு பிரத்யேக தொப்பி, கருப்பு கண்ணாடிகள் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
      தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து போலீஸாருக்கு நீர் மோர், எலுமிச்சை சாறு வழங்கும் திட்டம் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், வெயிலில் தொடர்ந்து பணியாற்றும் போக்குவரத்துப் போலீஸாருக்கு  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட, காற்றோட்டமான தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 போக்குவரத்து போலீஸார் பணியாற்றி வரும் நிலையில், முதல் கட்டமாக, விழுப்புரம், விக்கிரவாண்டி போக்குவரத்துப் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை விழுப்புரம் காவலர் மைதானத்தில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடிகளை வழங்கினார். இந்த தொப்பி, கண்ணாடியை பணியின்போது போக்குவரத்து போலீஸார் கட்டாயம் அணிந்துகொண்டு வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று எஸ்பி போலீஸாருக்கு அறிவுறுத்தினார்.
      போக்குவரத்து ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் வசந்த், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai