Enable Javscript for better performance
திரௌபதி அம்மன் கோயில் விழாவில் தேரை சுமந்து சென்ற பக்தர்கள்- Dinamani

சுடச்சுட

    

    திரௌபதி அம்மன் கோயில் விழாவில் தேரை சுமந்து சென்ற பக்தர்கள்

    By DIN  |   Published on : 31st March 2018 10:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா -  திரௌபதி அம்மன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, தங்களது தோளில் தேரை சுமந்து சென்றனர். 
     இந்தக் கோயிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கடந்த 
    20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ஆம் தேதி (வியாழக்கிழமை)  சிம்ம வாகனத்தில் திரௌபதி அம்மன் வீதி உலாவும்,  தொடர்ந்து கருட வாகனம்,  சிங்க வாகனம்,  விமானத்தில் வீதியுலா நடைபெற்றது. 
    மார்ச் 27-ஆம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார்.  வியாழக்கிழமை பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது.
    விழாவின் முக்கிய நிகழ்வாக  வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா நடைபெற்றது.  பிரமாண்ட தேர் அலங்கரிக்கப்பட்டு பகல் 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.  இந்தத் தேரை பக்தர்கள் தங்களது தோளில் சுமந்துகொண்டு முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றனர். 
    தேரில்,  அலங்கரிக்கப்பட்ட அர்ச்சுணன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
     தொடர்ந்து, பிற்பகல் 1 மணிக்கு கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், பாரதம் படிக்கப்பட்டு,  அரவாண் களப்பலியும் நடைபெற்றது.  தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு கோயில் முன் நிறைவடைந்தது.  தொடர்ந்து,  தீமிதி விழா நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai