Enable Javscript for better performance
தைலாபுரம் தோட்டத்தில் கருப்புக் கொடி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர்  ராமதாஸின் தைலாபுரம்   தோட்டம், கட்சி அலுவலகம்,  வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அந்தக் கட்சியினர் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசைக் கண்டித்தும், இதற்கு நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் விழுப்புரம் மாவட்டத்தில் பாமகவினர் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டின் வாயில் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கருப்புக் கொடியேற்றி பாமகவினர் போராட்டத்தைத் தொடங்கினர் .
    தொடர்ந்து,  வானூரில் பாமக மாவட்டத் தலைவர் சங்கர், ஒன்றியச் செயலர் சுதாகர் தலைமையிலான அந்தக் கட்சியினர்,  வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்புக் கொடி ஏற்றி கோஷமிட்டனர்.
    இதேபோல,  திண்டிவனத்தைச் சேர்ந்த பாமகவினர் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
    விழுப்புரத்தில் மத்திய மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் தங்க.ஜோதி,  மாவட்டச் செயலர் ஆர்.புகழேந்தி தலைமையிலான பாமகவினர் கருப்புக் கொடி ஏற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    விழுப்புரம் பூந்தோட்டம்,  மகாராஜபுரம்,  காகுப்பம் உள்ளிட்ட இடங்களில் மாநில பொதுச் செயலர் தங்க. ஜோதி தலைமையில், இளைஞரணித் தலைவர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலையில், பாமகவினர் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai